ஆசிய படகு போட்டி இலங்கையில்!
Friday, May 13th, 2016
ஆசிய படகோட்டப் போட்டிகளை இலங்கையில் நடத்துவதற்கு இலங்கை படகோட்டச் சங்கம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.
ஆசிய படகோட்டப் போட்டிகளை இந்த மாதம் 28 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 5 ஆம் திகதி வரை திருகோணமலை கடற்கரையில் நடத்துவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
16 நாடுகள் பங்கேற்கும் இந்த போட்டிகளில் 120 விளையாட்டு வீரர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கை விளையாட்டுத்துறை மற்றும் சுற்றுலாத்துறை ஆகியன ஒன்றிணைந்து இந்த படகோட்டப் போட்டிகளை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளோம்.இதன் மூலம் பெருமளவிலான சுற்றுலாப்பயணிகளை உள்ளீர்க்க தீர்மானித்துள்ளோம் என விளையாட்டுத்துறை அமைச்சர் தாயசிறி ஜயசேகர தெரிவித்தார்.
Related posts:
ஆவேசமான முன்னாள் அணித்தலைவர் கிளார்க்!
பிரெஞ்சு பகிரங்க டென்னிஸ்: விலகினார் செரீனா !
நாடு திரும்பியது 2023 ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற இலங்கை கிரிக்கெட் அணி!
|
|
|


