ஆசிய கிண்ண வாய்ப்பை இழந்த துஷ்மந்த சமீர!
Wednesday, August 23rd, 2023
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர ஆசிய கிண்ண தொடரில் விளையாடும் வாய்ப்பை இழந்துள்ளார். அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாகவே இந்த வாய்ப்பை இழந்துள்ளார்.
துஷ்மந்த சமீர இந்த ஆண்டு லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் செம்பியன் பட்டத்தை வென்ற B-Love Kandy அணியை பிரதிநிதித்துவப்படுத்தினார்.
எனினும் அவரால் 4 போட்டிகளில் மட்டுமே விளையாட முடிந்தது. போட்டியின் போது அவரது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதால், பல ஆரம்ப சுற்று போட்டிகள் மற்றும் இறுதி சுற்று போட்டிகளை தவறவிட்டார்.
இந்நிலையில் துஷ்மந்த சமீரவிற்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாக எதிர்வரும் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரிலும் விளையாட முடியாது என தெரிவிக்கப்படுகிறது.
ஆசியக் கிண்ணப் தொடருக்காக பரிந்துரைக்கப்பட்ட இலங்கை அணி விளையாட்டுத்துறை அமைச்சரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், காயமடைந்த துஷ்மந்த சமீரவுக்குப் பதிலாக கசுன் ராஜித இலங்கை அணிக்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
|
|
|


