ஆசிய கடற்கரை கரப்பந்தாட்ட போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு!
Saturday, February 4th, 2017
ஆசிய கடற்கரை கரப்பந்தாட்ட போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள 21 வயதுக்குற்பட்டோர் இலங்கை அணியின் வீரர்கள் தொடர்பான விபரம் வெளியாகியுள்ளது.
ஆசிய கடற்கரை கரப்பந்தாட்ட போட்டிக்கான வீரர்கள் தெரிவுப் போட்டிகள் கடந்த 22 ஆம் திகதி ஹெய்யந்துடுவ மாகொல இளைஞர் சேவைகள் உள்ளக அரங்கில் இடம்பெற்றது.
இதன்போது தமது சிறப்பான திறமையயை வெளிப்படுத்திய வீரர்கள் ஆசிய கடற்கரை கரப்பந்தாட்ட போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த ஆசிய கடற்கரை கரப்பந்தாட்ட போட்டி எதிர்வரும் மார்ச் மாதம் 2 ஆம் திகதி தொடக்கம் 4 ஆம் திகதிவரை தாய்லாந்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆண்கள் குழாம்
- டி.கே. ரங்க பிரபாத்
- ஜே.எல். அஷேன் ரஷ்மிக
- தரிந்து மதுசங்க
- பி.ஜி.மிஹிரங்க உதயகுமார்
பெண்கள் குழாம்
- எம்.எச்.ஹாசினி மல்ஷா பிரியமாளி
- ஏ.தாரகி நெலும் பிரியதசனி
- டபுள்யூ.ஷெஹான் அசங்கா
- டபுள்யூ.ரமேஷா மதுசானி பீரிஸ்

Related posts:
மணற்காடு சென். அன்ரனிஸ் விளையாட்டு கால்பந்தாட்டத் தொடரின் தற்போதைய நிலை!
இலங்கை அணி 91 ஓட்டங்களால் வெற்றி!
மீண்டும் அணியின் தலைவராக ஸ்டீவ் ஸ்மித்..?
|
|
|


