அவுஸ்திரேலிய மகளிர் அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றி!

மகளிர் உலகக் கிண்ண இருபதுக்கு20 கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் அவுஸ்திரேலிய மகளிர் அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய மகளிர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 112 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இந்தநிலையில், 113 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய மகளிர் அணி 15.5 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை அடைந்தது.
000
Related posts:
லொறி மோதியதை போல் உணர்ந்தேன்: பெய்லியின் அந்த நிமிடங்கள்!
சம்பியன்ஸ் கிண்ணம் - அரையிறுதியில் இங்கிலாந்து!
மூன்றாவது சுற்றில் ஆண்டி முர்ரே!
|
|