அவுஸ்திரேலிய கிரிக்கெட் தலைமை செயல் அதிகாரி திடீர் இராஜினாமா!

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ஜேம்ஸ் சதர்லெண்ட் தனது பதவியை திடீரென்று இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
அவுஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தில் 20 ஆண்டு காலமாக இருந்துள்ளேன். இதுதான் சரியான தருணம். இந்த முடிவில் நான் மிகவும் சௌகரியமாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
இருப்பினும் புதிய தலைமை செயல் அதிகாரி நியமிக்கப்படும் வரை அப்பதவியில் சதர்லெண்ட் நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தென்ஆபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கிய ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர், பான்கிராப்ட் ஆகியோருக்கு ஒரு ஆண்டு தடையை இவர் விதித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
அவுஸ்திலேலிய வீரர்களுக்கு எச்சரிக்கை!
இலங்கை அணி இறுதி போட்டிக்கு தெரிவு!
மகுடம் சூடியது அராலி சரஸ்வதி வித்தி!
|
|