அர்ஜென்டினாவை நசுக்கிய பிரேசில்!

Monday, November 14th, 2016

ரஷ்யாவில் 2018ம் ஆண்டு நடக்கவுள்ள பிபா உலகக்கிண்ண தொடருக்கான தகுதிச்சுற்று கால்பந்து போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் பிரேசிலில் நடந்த போட்டியில் அர்ஜென்டினா- பிரேசில் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பிரேசில் அணியின் கவுடினோ, நெய்மர், பவுலினோ தலா ஒரு கோல் அடிக்க அந்த அணி 3-0 என அர்ஜென்டினாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.

கிளப் போட்டிகளில் அசத்தும் மெஸ்சி அர்ஜென்டினா அணிக்காக ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் திணறி வருகிறார்.

மற்றொரு தகுதிச் சுற்றில் உலக சாம்பியன் ஜேர்மனி- சான் மரினோ அணிகள் மோதியது. இதில் கோல் மழை பொழிந்த ஜேர்மனி 8-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.இதில் அறிமுக வீரராக களமிறங்கிய செர்ஜி ’ஹாட்ரிக்’ கோலை பதிவு செய்து அசத்தினார்.

625.0.560.350.160.300.053.800.668.160.90-41

Related posts: