அம்பயர் பில்லி பவுடன் நீக்கம்!

கிரிக்கெட் வீரர்களுக்கு என ஒரு ரசிகர் கூட்டம் இருந்தாலும், தனது வித்தியாசமான ஸ்டைல் அம்பயரிங் மூலம் உலக கிரிக்கெட் ரசிகர்களை தன் வசப்படுத்தியவர் பில்லி பவுடன்.
தற்போது, அவர் சர்வதேச அம்பயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
நியூசிலாந்தை சேர்ந்த பில்லி பவுடன்(வயது-53), துவக்கத்தில் வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர், பின்பு உடல் நலக்குறைவால் கிரிக்கெட் விளையாட்டை கைவிட்டார்.
கிரிக்கெட் மீது கொண்ட காதலால் அம்பயர் பணிக்கு மாறினார். வழக்கமான அம்பயர்கள் போல் இல்லாமல், தனது வித்தியாசமான ஸ்டைலால் பல ரசிகர்களை கவர்ந்து பிரபலமடைந்தார்.
தனது 21 ஆண்டுகால அம்பயர் வாழ்க்கையில் மொத்தம் 200 ஒரு நாள், 84 டெஸ்ட் போட்டிகளில் அம்பயராக பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில், நியூசிலாந்துக்கான சர்சதேச அம்பயர் குழு பட்டியிலில் இருந்து பில்லி பவுடன் உட்பட 3 பேர் நீக்கப்பட்டுள்ளனர். இதற்குப் பதில் தேசிய அம்பயர் மற்றும் பெண்கள் போட்டிகளுக்கான அம்பயர் குழுவில் பவுடன் சேர்க்கப்பட்டுள்ளார்.
இனி இவரது ஸ்டைலை நியூசிலாந்தில் நடக்கும் உள்ளூர் போட்டிகளில் மட்டுமே காண முடியும்.
Related posts:
தென்னாபிரிக்கவை வென்றது நியூசிலாந்து!
ஐ.பி.எல் தொடரை இலங்கையில் நடத்துவது ஆபத்து - பிரபல சுழற்பந்து வீரர் முத்தையா முரளிதரன் தெரிவிப்பு!
ஆர்ஜன்டினா அணி முதல் வெற்றியை பதிவு செய்தது - பிரான்ஸ் இரண்டாம் சுற்றுக்கு தகுதி!
|
|