அணியிலிருந்து நீக்கிவிடுவோம்: இலங்கை கிரிக்கெற் எச்சரிக்கை!
Saturday, October 21st, 2017
இலங்கை – பாகிஸ்தான் அணிகள் மோதும் மூன்றாவது டி20 போட்டி லாகூரில் நடைபெறுகிறது. இதற்காக இலங்கை அணி பாகிஸ்தான் செல்லவுள்ள நிலையில் வீரர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என பாகிஸ்தான் வெளியுறுவுத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
இதற்கிடையே பாகிஸ்தானில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க இலங்கை வீரர்கள் மறுப்பு தெரிவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இவர்களை சம்மதிக்க வைக்க இலங்கை கிரிக்கெட் வாரியம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
பாகிஸ்தானில் நடைபெறும் போட்டியில் விளையாடாத நபர்கள் அபுதாபியில் நடக்கும் இரண்டு டி20 போட்டியிலிருந்து நீக்கப்படுவார்கள் என எச்சரித்துள்ளது.கடந்த 2009ம் ஆண்டு இலங்கை அணி மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Related posts:
30 ஓவர் போட்டித் தரப்படுத்தல் - திருநெல்வேலி சி.சி அணி முதலிடம்!
25 பந்துகளில் 20 சிக்சர்கள்: உலக சாதனை படைத்த ஸ்காட்லாந்து கிரிக்கெட் வீரர்!
அவுஸ்திரேலிய மகளிர் அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றி!
|
|
|


