அணித்தலைவர் பதவியில் இருந்து வார்னர் நீக்கம்!

Thursday, March 29th, 2018

ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணித்தலைவர் பதவியில் இருந்து அவுஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னர் நீக்கப்பட்டுள்ளார்.

இந்த தகவலை சன்ரைசர்ஸ் ஹைதாராபாத் அணி நிர்வாகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கே.சண்முகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கேப்டவுனில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியின் போது அவுஸ்திரேலிய வீரர் கேமரூன் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் பந்தை திட்டமிட்டு சேதப்படுத்தினோம் என்பதை ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், பான்கிராப்ட் ஆகியோர் ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து, ஸ்மித்துக்கு ஒரு போட்டியில் விளையாடத்தடையும், போட்டி ஊதியத்தில் இருந்து 100 சதவீதம் அபராதமாக செலுத்த ஐசிசி உத்தரவிட்டது. மேலும், துணைக் கேப்டன் வார்னருக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை விதித்தது.

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் ஐதராபாத் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து டேவிட் வார்னர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புது கேப்டன் விரைவில் அறிவிக்கப்படுவார் என அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனால் இதுவரை இல்லாத வகையில் ஐ.பி.எல் தொடரில் பங்கேற்கும் அனைத்து வீரர்களும் இந்தியாவை சேர்ந்தவர்கள் எனும் அரிய நிகழ்வு இந்த வருடம் நிகழ உள்ளது குறிப்பிடத்தக்கது

Related posts: