Moto Z ஸ்மார்ட்போனின் அட்டகாசமான அம்சங்கள்!

Saturday, June 11th, 2016

Motorola நிறுவனம் Moto Z மற்றும் Moto Z Force என்று இரு புதிய ஸ்மார்ட் போன்களை அறிமுகப்படுத்தியுள்ளது. கறுப்பு, தங்க நிறம் மற்றும் கறுப்புடன் தங்கம் கலந்த நிறம் என மூன்று வண்ணங்களில் வெளிவரவிருக்கும் இந்த ஸ்மார்ட் போன் செப்ரெம்பர் மாதம் விற்பனைக்கு வருகிறது.

கடந்த ஆண்டு அறிமுகமான Moto X மொடல் கருவியின் அடுத்த மொடல் கருவி தான் Moto Z. இந்த ஸ்மார்ட்போன் விமானம் தயாரிக்க பயன்படும் அலுமினியம் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த கருவியின் எடை மிகவும் குறைவாகவே இருக்கின்றது.

இது 5.5 இன்ச் HD திரை மற்றும் 1440 pixels 2560 resolution கொண்டுள்ளது. இதோடு கொரில்லா கிளாஸ் கொண்டும் பாதுகாக்கப்பட்டுள்ளது. Moto Z கருவியானது 2.2 Snapdragon 820 processor கொண்டுள்ளது. இதோடு 4GB RAM வழங்கப்பட்டுள்ளதால் கருவியின் வேகம் குறையாமல் இருக்கும்.

மேலும், 32/64 GB என இரு வித இன்டர்னல் மெமரி கொண்ட பதிப்பாக வெளியாகின்றது. மெமரியை 2 TB வரை அதாவது 2000 GB வரை நீட்டிக்கும் வசதியும் உள்ளது. இது android marshmallow 6.0.1 இயங்குதளம் கொண்டு இயங்குகின்றது. இந்த Moto Z கருவியில் 13MP பின்பக்க கமெரா, 5 MP முன்பக்க கமெரா, LED flash, laser autofocus மற்றும் முன்பக்க கேமராவிற்கு wide angle lens, , LED flash வழங்கப்பட்டுள்ளது.

2600 mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் Moto Z கருவியில் turbo charging அம்சமும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் 15 நிமிடம் சார்ஜ் செய்து சுமார் 8 மணி நேரம் பயன்படுத்த முடியும். Moto Z கருவியில் வழங்கப்பட்டுள்ள nano coating இதனை மழையில் நனைந்தாலும் எதுவும் ஆகாமல் பார்த்து கொள்கின்றது.

இதில் கைரேகை வசதி வழங்கப்பட்டுள்ளதால் கருவியை எளிதாக அன்லாக் செய்வதோடு பாதுகாப்பானதாகவும் மாற்றுகின்றது.

Related posts: