800 வருடங்களுக்கு முந்திய சமாதான ஒப்பந்தம் இலங்கையில்!

Tuesday, April 11th, 2017

800 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்ட உலகின் மிகப்பழைமையான சமாதான ஒப்பந்தம் ஒன்று இலங்கையில் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நாடுகளுக்கு இடையில் ஏற்படும் யுத்தத்தின் போது பல்வேறு போர் ஒப்பந்தங்கள் கைச்சாத்திடுவது வழமையான ஒன்றாகவே காணப்படுகின்றது.

எனினும் உலகிலேயே மிகப் பழமையான சமாதான ஒப்பந்தம் இலங்கையிலேயே உள்ளதாக தெரியவந்துள்ளது.இலங்கையில் ஆட்சி செய்த அரசர்கள் இருவருக்கு இடையில் இந்த சமாதான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.குறித்த இரண்டு அரசர்களுக்கு இடையில் காணப்பட்ட யுத்தத்தை நிறைவுக் கொண்டு வருவதே இந்த யுத்தத்தின் நோக்கமாகும்.

800 வருடங்களுக்கு முன்னர் முதலாம் பராக்கிரமபாகு மற்றும் இரண்டாம் கஜபாகு மன்னர்களுக்கிடையில் ஏற்படுத்திக் கொண்ட இந்த சமாதான ஒப்பந்தத்தில் உள்ள எழுத்துக்கள் இன்றும் தெளிவாக பார்க்க முடியும்.

இவ்வாறு கல்லால் செதுக்கப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம் குருணாகல், இப்பாகமுவ பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கொக்கரெல்ல கிராமத்திற்கு சொந்தமான பகுதியின் விகாரை ஒன்றில் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது.

இரண்டு மன்னர்களுக்கும் இடையில் அப்போதைய காலப்பகுதியில் இடம்பெற்ற யுத்தம் இந்த சமாதான ஒப்பந்தத்துடன் நிறைவுக்கு வந்ததாக மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த விகாரைக்கு செல்லும் போது முதலாவதாக இந்த வரலாற்று கடிதத்தையே பார்க்க முடியும் என கூறப்படுகின்றது

Related posts: