65 ஆயிரம் டொலருக்கு விற்பனையானது ஹிட்லரின் உலக உருண்டை!

ஜேர்மனியின் முன்னாள் சர்வாதிகார ஆட்சியாளர் அடோல்ப் ஹிட்லர் பயன்படுத்திய உலக உருண்டை 65 ஆயிரம் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
1945ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் உலகப் போரின் பின்னர் ஹிட்லரின் ஆட்சி அதிகாரம் பறிபோனது. அப்போது அவர் அல்ப்ஸ் மலை தொடர் பகுதியில் தலைமறைவாகி வாழ்ந்து வந்தார்.
ஹிட்லர் வாழ்ந்து வந்த மாளிகையை சோதனையிட்ட இராணுவ சிப்பாய் ஒருவர், ஹிட்லர் பயன்படுத்திய உலக உருண்டையை தனது வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார்.பல வருடங்களின் பின்னர் இராணுவ சிப்பாய் எடுத்துச் சென்ற ஹிட்லரின் உலக உருண்டையை அவர் ஏலவிற்பனை நிறுவனம் ஒன்றிடம் கையளித்துள்ளார். இந்த நிறுவனம் அந்த உலக உருண்டையை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு 65 ஆயிரம் டொலர்களுக்கு விற்பனை செய்துள்ளது. அதேபோல் ஹிட்லர் பயன்படுத்திய சட்டை ஒன்றும் 10 ஆயிரம் டொலர்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|