மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு!

Saturday, November 5th, 2016

கணினியில் உபயோகப்படுத்தும் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 இயங்குதளங்களின் புதிய விற்பனை செயல்பாடுகளை நிறுத்தி கொள்ளப்போவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

உலகளவில் தொழிநுட்பத்தில் பல புரட்சிகளை ஏற்படுத்தி வரும் மைக்ரோசாப்ட் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில், இனி புதிதாக தயாரிக்கப்படும் கணினிகளில் விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 இன்ஸ்டால் செய்யப்பட மாட்டாது என கூறப்பட்டுள்ளது.

மேலும், இனி வரும் எல்லா கணினிகளிலும் விண்டோஸ் 10 இயங்குதளம் மூலம் செயல்படும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும் பழைய இயங்குதளங்களை உபயோகபடுத்துபவர்கள் இன்னும் சில வருடம் வரை பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.விண்டேஸ் 7 இயங்குதளம் கடந்த 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது என்பதும், விண்டோஸ் 8 இயங்குதளம் 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.500.400.194.800.668.160.90 (1)

Related posts: