4 அடி நீளத்தில் எலி!

Thursday, March 17th, 2016

இங்கிலாந்தில் உள்ள வடக்கு லண்டனை சேர்ந்தவர் டோனி சுமித். கியாஸ் நிறுவன என்ஜினீயர்.

அவர், அங்குள்ள குழந்தைகள் விளையாட்டு மைதானம் அருகே பணியில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது ஒரு வளைக்குள் இருந்து ராட்சத எலி ஒன்று வெளியே வந்தது. அதை டோனி சுமித் பிடித்துக் கொண்டார்.

அந்த எலி, வாலின் நீளத்தோடு சேர்த்து 4 அடி நீளம் இருந்தது. 11½ கிலோ எடை இருந்தது. பூனையை விட பெரிதாக இருந்தது.

இது தொடர்பாக டோனி சுமித் கூறும்போது, ‘‘எங்கள் வீட்டில் வளர்க்கும் நாயின் அளவுக்கு எலி பெரிதாக இருக்கிறது’’ என்று கூறினார். இதுவரை பிடிக்கப்பட்ட எலிகளிலேயே இதுதான் பெரிய எலி என்று தெரிய வந்துள்ளது. எனவே கின்னஸ் புத்தகத்திலும் இது இடம்பெற இருக்கிறது.

Related posts: