26 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆபிரிக்காவுக்கு கிடைத்த அதிஸ்டம்!

வலைதளங்கள் அறிமுகமாகி 26 ஆண்டுகள் ஆகியும் ஆப்ரிக்காவுக்கு எனத் தனி இன்டர்நெட் டொமைன் இருந்ததில்லை.
“.com”, “.org” போன்ற டொமைன்கள் மொத்தம் 300 மில்லியன் அளவிற்கு உலகம் முழுக்க இருக்கிறது.
இதில் மிகப் பிரபலமாக இருக்கும் “.com”ல் மட்டுமே 125.8 மில்லியன் அளவிற்கான பதிவு செய்யப்பட்ட உபயோகிப்பாளர்கள் இருக்கின்றனர்.
ஆபிரிக்காவில் ஏற்கனவே “.ao” என்ற டொமைன் அங்கோலா நாட்டிற்காகவும், “.zw” என்ற டொமைன் ஜிம்பாப்வே நாட்டிற்காகவும் இருக்கிறது.
ஆனால், மொத்த ஆப்ரிக்க கண்டத்திற்கு என எதுவுமில்லாமல் இருந்தது. இந்நிலையில், “.africa” என்ற புதிய டொமைனை தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த ZA சென்ட்ரல் ரெஜிஸ்டரி என்ற நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
வரும் ஜூலை மாதத்திலிருந்து இது உபயோகத்திற்கு வரும் என்று சொல்லப்பட்டுள்ளது. “.africa””வின் ஒரு டொமைனை 12000 ரூபாய்க்கு வாங்கலாம்.
இன்றைய தேதியில் ஆப்ரிக்காவின் வீடுகள் 10.7% அளவிற்கே இண்டர்நெட் கனெக்ஷன் பெற்றிருக்கிறது. இதுவே, ஐரோப்பாவில் 82.1% மாக இருக்கிறது.
Related posts:
|
|