உலகின் மிகப்பெரிய விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றியில்!

Thursday, March 1st, 2018

கலிபோர்னியாவின் மஜாவ் விமானநிலையத்தில் கடந்த 26 ம் திகதி ஸ்ட்ராடோலாஞ்ச் (stratolaunch) என அழைக்கப்படும் உலகின் மிகப்பெரிய விமானத்தின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாகநிறைவேறியுள்ளது.

இந்த விமானத்தின் பணிகள் இன்னும் முழுமையாக நிறைவடையவில்லை. தற்போது சோதனை ஓட்டம் மட்டுமே நிறைவேறியுள்ளது என மைக்ரோசாப்ட் இணை நிறுவுனர் போல் ஆலன்தெரிவித்துள்ளார்.

மேலும் 6 என்ஜின்களை கொண்ட இந்த விமானம் பார்வையாளர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது. இந்த விமானத்தின் மூலம் செயற்கைக்கோளை ஏவும் ராக்கெட்டில் பெருமளவுஎரிபொருள் மிச்சப்படுத்தப்படும். அதேவேளை ராக்கெட்டை செலுத்திய பின் பத்திரமாக பூமிக்கு திரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 385 அடி உயரம் கொண்ட விமானத்தின் இரண்டுஇறக்கைகளுக்கு இடையில் உள்ள தூரம் மட்டும், 117மீட்டர்கள் ஆகும். இது ஒரு கால்பந்து மைதானத்தை விட பெரியதாகும்.

Related posts: