200 மேற்பட்ட வகையான கார்களில் Apple Car Play பயன்படுத்தலாம்!

Sunday, December 11th, 2016

ஆப்பிள் நிறுவனமானது இரண்டு வருடங்களுக்கு முன்னர் 2014ம் ஆண்டு மார்ச் மாதம் Apple CarPlay எனும் சாதனத்தினை அறிமுகம் செய்திருந்தது.

இச் சாதனமானது கார்களில் பயன்படுத்தக்கூடியதாக இருப்பதுடன் இதன் மூலம் மேப் வசதி உட்பட தொலைபேசி அழைப்புக்கள், பாடல்களை கேட்டு மகிழுதல் போன்றவற்றினையும் மேற்கொள்ள முடியும்.ஆப்பிள் நிறுவனம் முன்னர் அறிமுகம் செய்த Apple CarPlay சாதனமாது 150 வகையான கார்களில் மட்டுமே பயன்படுத்தக்கூடியதாக இருந்தது.

இதனால் சில வகையான கார்களைப் பயன்படுத்துபவர்களுக்கு இச் சாதனத்தினைப் பயன்படுத்துவதில் ஏமாற்றமே மிஞ்சியது.தற்போது இப்பிரச்சினைக்கு தீர்வு தரும முகமாக Apple CarPlay சாதனத்தின் புதிய பதிப்பு ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.

அடுத்த வருடம் சந்தைக்கு வரவுள்ள இச் சாதனத்தினை 200 வகையான கார்களில் பயன்படுத்தக்கூடியதாக இருத்தல் விசேட அம்சமாகும்.இதன்படி Audi, Honda, Maserati, Land Rover, Ferrari, Ford மற்றும் மேலும் பல நிறுவனங்களின் கார்களில் பயன்படுத்த முடியும்.

625.500.560.350.160.300.053.800.900.160.90 (1)

Related posts: