இலங்கையில் அதி சொகுசு மோட்டார் வாகனம் அறிமுகம்!
Wednesday, December 18th, 2019
இலங்கையின் உள்ளூர் தயாரிப்பான அதி சொகுசுக் கார் 2020 ஏப்ரல் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
2020 ஏப்ரலில் ஜெனீவாவில் இடம்பெறும் மோட்டார் கண்காட்சியில் இந்த கார் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அதன் தயாரிப்பாளர் ஹர்ஷா சுபசிங்க தெரிவித்துள்ளார்.
வேகா என்ற பெயரைக்கொண்ட இந்தக்காரின் பயிற்சி ஓட்டம் அண்மையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
300 கிலோவோட்ஸ் பெற்றரி சக்தியைக் கொண்ட இந்த சொகுசுக் கார் 240 கிலோமீற்றர் தரத்தைக் கொண்டுள்ளது.
இந்தநிலையில் மின்சாரத்தின் மூலம் இயங்கும் இந்த சுப்பர் கார் ஆசியப் பிராந்தியத்தில் முதல் தடவையாக இலங்கையிலேயே தயாரிக்கப்பட்டுள்ளதாக சுபசிங்க குறிப்பிட்டுள்ளார். இதன் பெற்றரி 15 நிமிடங்களுக்குள் மின்சக்தியை பெறும் வகையில் அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
நெடுந்தீவு பிரதேசத்தின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஆராய்வு!
அறிக்கையை முழுமையாக ஆராய்ந்த பின்னர் காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை - உயிர்த்த ஞாயிறு தாக்குதல் த...
சாரதிகளுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவித்தல் - வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!
|
|
|


