ஸ்மார்ட்போன் சந்தையில் புரட்சி!

எளிதில் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை சாம்சங் நிறுவனம் விரைவில் வெளியிடலாம் என தெரிகிறது.இதற்கான காப்புரிமைக்காகவும் சாம்சங் நிறுவனம் விண்ணப்பித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனவே 2018ம் ஆண்டிலேயே மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் வெளியாகலாம் என்றும், இதுதொடர்பான புகைப்படங்களும் LetsGoDigital-ல் வெளியாகியுள்ளது. இந்த வரைபடங்கள் மடிக்கக்கூடிய Clamshell வடிவமைப்புடன் இருப்பதை காட்டுகிறது.இரண்டு டிஸ்ப்ளேக்கள் உள்ளன, ஒன்றை மடிக்கக்கூடிய வகையிலும், மற்றொன்று வெளிப்புறமாக தெரியும் வண்ணம் உள்ளன.எனினும் மடிக்கப்பட்ட நிலையில் போன் பெரியதாக இருப்பதால் அந்த குறையை சாம்சங் நிவர்த்தி செய்யலாம் என தெரிகிறது.
Related posts:
ஐஸ்கிரீம் நீண்ட ஆயுளைத்தரும் என ஆய்வில் தகவல்!
சார்ஜ் செய்தால் 500 கி.மீ ஓடக்கூடிய எலக்ட்ரிக் செமி-ட்ரக்!
ஊழல் செய்பவர்களை கண்டுபிடிக்கும் ரோபோ!
|
|