ஷராகத் ஹுசைனுக்கு பணம் திருப்பிக்கொடுக்க மறுத்த அப்பிள் நிறுவனம்!
Sunday, October 30th, 2016
பிரித்தானியாவில் ஹுசைன் என்ற பெயர் கொண்ட நபருக்கு அப்பிள் நிறுவனம் மொபைலுக்கான பணத்தை திருப்பி வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது.
பிரித்தானியாவில் பர்மிங்காம் பகுதியில் குடியிருந்து வருபவர் 2 குழந்தைகளுக்கு தந்தையான ஷராகத் ஹுசைன். இவர் தனது தங்கைக்காக வாங்கிய அப்பில் மொபைலை சில காரணங்களால் திருப்பி ஒப்படைத்து அதற்குரிய பணத்தை திரும்ப பெற முடிவு செய்துள்ளார்.
இதனையடுத்து குறித்த நிறுவனத்தின் அதிகாரபூர்வ கடை ஒன்றில் மொபைலை திருப்பி அளித்துள்ளார். ஆனால் அப்பில் நிறுவனம் தற்போது மொபைலுக்கான பணத்தை திருப்பி வழங்க மறுத்துள்ளது.
மட்டுமின்றி பிரித்தானியா அரசின் தடை செய்யப்பட்டவர்கள் பட்டியலில் குறித்த பெயரும் குறிப்பிடப்பட்டு இருப்பதால், அப்பில் மொபைல் வாங்கியதே சட்டவிரோதமானது என்றும் குறிப்பிட்டுள்ளது.
மொபைலுக்கான 799 பவுண்ட் பணத்தை திருப்பித்தர வேண்டும் என்றால், குறித்த ஹுசைன் என்பவர் ஈராக்கின் சர்வாதிகாரி சத்தாம் ஹுசைன் அல்ல என்பதை நிரூபிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.
ஈராக் ஜனாதிபதியாக இருந்த ஹுசைன் கடந்த 2006 ஆம் ஆண்டு அந்நாட்டு ராணுவ தளத்தில் வைத்து தூக்கிலேற்றப்பட்டார். அந்த ஹுசைன் எனும் பெயருக்கும் பர்மிங்காம் பகுதியில் குடியிருந்துவரும் ஹுசைன் என்ற பெயருக்கும் வேறுபாடு உண்டு என்று இவர் சாதித்துள்ளார்.
இருப்பினும் குறித்த அப்பிள் நிறுவன ஊழியர்களின் குழப்பம் இதுவரை தீர்ந்தபாடில்லை. முதலில் அப்பிள் நிறுவனத்திடம் இருந்து குறித்த விவகாரம் தொடர்பில் மின் அஞ்சல் ஒன்று வந்தபோது அதை போலி என்று கருதியதாகவும் பின்னர்தான் விவகாரத்தின் நிஜத்தன்மை புரிந்தது எனவும் ஹுசைன் கவலை தெரிவித்துள்ளார்.

Related posts:
|
|
|


