வீட்டுவாசலுக்கு உணவு கொண்டுவரும் ரோபோக்கள்!

Saturday, April 15th, 2017

நீங்கள் அடுத்தமுறை சாப்பாட்டுக்கு ஓடர் செய்தால் அது தானியங்கி ரோபோக்கள் மூலம் உங்கள் வீட்டு வாசலில் கொண்டுவந்து கொடுக்கப்படலாம்.

உணவு விற்பனை செயலியான எல்ப் ஈட் 24 நிறுவனமும் மார்ப்ள் ரோபோ நிறுவனமும் இணைந்து இதை ஏற்கனவே செய்ய ஆரம்பித்துவிட்டன.சான்பிரான்ஸிஸ்கோவின் சில பகுதிகளின் உணவுவிடுதிகளின் உணவை இவை விநியோகம் செய்கின்றன.இந்த செயலியில் உணவுக்குப்பணம் செலுத்தினால் வாடிக்கையாளர் வீட்டு வாசலுக்கே உணவு வந்து சேரும்.

இந்த ரோபோக்கள் உணரிகள், கேமெரா மற்றும் அல்ட்ராசோனிக் தொழில்நுட்ப உதவியுடன் சாலைகளில் பயணிக்கும்.வழியில் எதிர்ப்படும் மனிதர்கள், கார்கள் உள்ளிட்ட அனைத்தையும் இவற்றால் உணர முடியும் என்பதோடு அந்த தடைகளை தவிர்த்து சாதுரியமாக இவற்றால் பயணிக்கமுடியும்.

அதேசமயத்தில் இவற்றின் செயற்பாடுகளை தொடர்ந்து மனிதர்கள் கண்காணிப்பார்கள் என்பதால் இவை சிக்கலுக்கு உள்ளானால் உடனடியாக மனிதர்கள் உதவிக்கு வருவார்கள்.

Related posts: