விளையாட்டு மைதானத்தில் இருந்த இராட்சத வடிவிலான ஸ்வஸ்திகா சின்னம்!
Wednesday, November 22nd, 2017
ஜேர்மனியில் விளையாட்டு மைதானம் ஒன்றில் நிலம் தோண்டப்பட்டபோது இராட்சத வடிவிலான ஸ்வஸ்திகா முத்திரை கிடைத்துள்ளது.
ஹம்பர்க் நகரில் உள்ள விளையாட்டு மைதானத்தில், புதிய உடைமாற்றும் அறைகள் கட்டுவதற்காக குழிகள் தோண்டப்பட்டது. அப்போது இயந்திரத்தில் ஏதோ திடப்பொருள் ஒன்று தட்டுபட்டுள்ளது, பிறகு தான் தெரிந்தது அது ஸ்வஸ்திகா முத்திரை சின்னம் என்று, அந்த முத்திரை பல ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும்.40 சென்டிமீட்டர் அளவில், கான்கிரீட்டால் உருவாக்கப்பட்டிருந்தால் அதனை நகர்த்த முடியவில்லை.
எனினும் விளையாட்டுகள் வழக்கம் போல நடைபெறும் என்றும், ஸ்வஸ்திகா முத்திரை விரைவில் அகற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
Google Chrome இயங்க மறுக்கிறதா?
எழுத்தாளர் பால் பேட்டிக்கு மான் புக்கர் விருது!
சூப்பர் வசதிகளுடன் வருகின்றது HTC 11 மொடல் செல்போன்கள்!
|
|
|


