விரிவுபடுத்தப்படும் பேஸ்புக் லைட் அப்பிளிக்கேஷன்!

பேஸ்புக் வலைத்தளத்தினை மொபைல் சாதனங்களில் இலகுவாக பயன்படுத்துவதற்காக அறிமுகம் செய்யப்பட்ட அப்பிளிக்கேஷனே பேஸ்புக் லைட் ஆகும்.
இந்த அப்பிளிக்கேஷன் ஆனது மிகக்குறைந்த அளவு டேட்டாவினை பயன்படுத்தக்கூடியதாக இருப்பதுடன் வேகம் குறைந்த இணைய இணைப்பிலும் செயற்படக்கூடியது.
இவ்வாறான சிறப்பம்சங்களைக் கொண்ட குறித்த அப்பிளிக்கேஷன் உலகின் பல நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
எனினும் ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்க நாடுகளில் தற்போதுதான் அறிமுகம் செய்யப்படுகின்றது.
மேற்கண்ட நாடுகளில் வசிப்பவர்கள் எதிர்வரும் வாரம் முதல் இந்த அப்பிளிக்கேஷனை தரவிறக்கம் செய்து பயன்படுத்திக்கொள்ள முடியும்.
பழைய அன்ரோயிட் சாதனங்களிலும் பயன்படுத்தக்கூடிய வகையில் இவ் அப்பிளிக்கேஷன் மாற்றியமைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
Related posts:
உணர்ச்சியை அடக்க முடியாமல் கதறி அழுத அகதி சிறுவன்: நெஞ்சை உருக்கும் மற்றொரு புகைப்படம்!
அதிக விலைக்கு விற்பனையாகி சாதனை படைத்த ஓவியம்!
விண்வெளி நிலையத்திற்கு வெளியே நீண்ட நேரம் நடமாடும் வீரர்கள்!
|
|