வரலாற்றில் இடம்பிடித்த புகைப்பட பெண் மரணம்!

Monday, September 12th, 2016

இரண்டாம் உலகப் போரின் முடிவை குறிக்கின்ற ஓர் அடையாள முக்கியத்துவம் வாய்ந்த புகைப்படத்தில் மாலுமி ஒருவரால் முத்தமிடப்பட்ட பெண் தன்னுடைய 92-வது வயதில் இறந்துள்ளார்.

நுரையீரல் வீக்கத்தால் துன்புற்ற கிரிட்டா சிம்மர் ஃபிரைடுமேன் வெர்ஜீனியாவின் ரிச்மண்டிலுள்ள ஒரு மருத்துவமனையில் இறந்துவிட்டதாக அவருடைய மகன் ஜோசுவா ஃபிரைடுமேன் கூறியிருக்கிறார்.ஃபிரைடுமேன் 21 வயதில் பல் மருத்துவ உதவியாளராக பணிபுரிந்தபோது, 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் நாள் நியூயார்க்கிலுள்ள டைம்ஸ் சதுக்கத்தில் வைத்து ஜார்ஜ் மென்டோசா என்பவர் அவரை அள்ளி அணைத்து முத்தம் கொடுத்தார்.

அமெரிக்காவில் நடைபெற்ற ஜப்பான் மீதான வெற்றியை அந்நாடு கொண்டாடுவதை காட்டும், என்றுமே நிலைக்கின்ற புகைப்படமாக அது மாறிவிட்டது.தொடக்கத்தில் “லைப்“ பத்திரிகையில் போரின் வெற்றியை குறித்துக்காட்டும் புகைப்படமாகத்தான் இது வெளிவந்தது.

160911082326_cn_vj_day_kiss_976x549_afp

1960 ஆம் ஆண்டு வரை இப்படியொரு புகைப்படம் இருப்பதே தனக்குத் தெரியாது என்று ஃபிரைடுமேன் தெரிவித்திருக்கிறார்.இந்த புகைப்படத்தை எடுத்த புகைப்படக் கலைஞர் ஆல்ஃபிரெட் இசென்ஸ்டெயிடு எழுதிய புத்தகத்தைப் பார்த்த பின்னர்தான் இதுபற்றி அவர் அவருக்குத் தெரியவந்தது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் மாலுமியும், செவிலியும் “நாங்கள் தான்” என்று பலர் உரிமை கோரி வந்தார்கள். 1980 ஆம் ஆண்டு தான் அது ஃபிரைடுமேன் என்றும், மென்டோசா என்றும் உறுதி செய்யப்பட்டது.மிகவும் நெருங்கி இறுக்கமாக அணைத்தப்படி இந்த புகைப்படத்தில் அவர்கள் தோன்றினாலும் அவர்கள் ஒருவரையொருவர் அறிந்தவர்கள் அல்ல.

160911121454_vj_day_kiss_976x549_getty

எதிர்காலத்தில் மனைவியாக வரவிருந்தவரோடு மென்டோசா பேசி உரையாடி பழகி வந்திருந்தவர். அவரது காதலி வேறு சில புகைப்படங்களில் சிரித்துக் கொண்டிருப்பதை காண முடிகிறது.2005 ஆம் ஆண்டு முன்னாள் படைவீரர் வரலாறு பணித்திட்டத்திற்கு எடுக்கப்பட்ட நேர்முகத்தில், அது காதல் உணர்வோடு வழங்கப்பட்டதல்ல என்று ஃபிரைடுமேன் நினைவு கூர்ந்துள்ளார்.

 “இது யாரோ ஒருவர் வெற்றியை கொண்டாடுகிறார் என்பதை வெளிக்காட்டுவது போன்றதே. அது காதல் வயப்பட்ட முத்தமல்ல” என்று அவர் தெரிவிதிருக்கிறார்.ஜப்பான் அமெரிக்காவிடம் சரணடைந்ததால் அமெரிக்கர்கள் அடைந்த மகிழ்ச்சியின் அடையாளம் என இந்த புகைப்படம் புகழப்பட்டாலும், மிகவும் பொதுவான பாலியல் தாக்குதலின் ஆவணத்திற்கு சற்று மேம்பட்டது என்று சமீப காலத்தில் சிலர் கூறுவதாக டைம் பத்திரிகை குறிப்பிடுகிறது.

160911121235_vj_day_kiss_976x549_getty

Related posts: