வடதுருவத்திற்கு ஆய்வுக்கலன்: பருவநிலை மாற்றங்களை கணிக்க திட்டம்!
Tuesday, February 21st, 2017
கடல் பனியில் சிக்கிய நிலையில், பருவநிலை மாற்றங்களை கணிப்பதற்காக வடதுருவத்திற்கு ஆய்வுக்கலனை அனுப்பும் பேரார்வமிக்க திட்டம் பற்றிய தகவல்களை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த பயணத் திட்டத்திற்குத் தேவைப்படும் ஏறக்குறைய எல்லா நிதியும் சேகரிக்கப்பட்டுவிட்டதாக, திட்டத்திற்கு தலைமையேற்றிருக்கும் பேராசிரியர் மார்க்ஸ் ரெக்ஸ் பாஸ்டனில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் கூறினார்.
ஆர்டிக் பனிக்கடலுக்கு 2019ம் ஆண்டில் பயணம் மேற்கொள்ளும் இந்த ஆய்வுக்கலன், குளிர்காலத்தில் அங்கேயே பனி உறைந்த கடற்பரப்பில் சிக்கிக்கொள்ள வைக்கப்படும். இந்த கலன் எடுக்கும் அளவீடுகளால், துல்லியமான வானிலை முன்கணிப்புகள், சிறந்த பருவநிலை மாதிரியை உருவாக்குதல் மற்றும் பருவநிலை மாற்றம் பற்றிய சரியான புரிதல்கள் கிடைக்கும். ஐரோப்பா, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீன விஞ்ஞானிகள் இந்த் திட்டத்தில் பணிபுரிகிறார்கள்.

Related posts:
|
|
|


