ரோபோக்களால் மனிதர்களுக்கு பாரிய அச்சுறுத்தல்!

Sunday, March 25th, 2018

ரோபோக்கள், கணினிகள், எந்திரங்கள் ஆகியவற்றின் வருகையால் அடுத்த 15 ஆண்டுகளில் மனிதர்களுக்கு வேலைவாய்ப்புகள் இருக்குமா எனத் தெரியவில்லை என்று இந்திய ரிசர்வ் வங்கியின்முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் அச்சம் வெளியிட்டுள்ளார்.

சிக்காக்கோ பல்கலையில் நிதித்துறையில் பேராசிரியராக பணியாற்றிவரும்  ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கேரளாவில் நடைபெற்ற சர்வதேச டிஜிட்டல் மாநாட்டில்பங்கேற்று உரையாற்றியபோதே இதனைத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக ரோபோக்கள் பயிற்சி சார்ந்த, பயிற்சி சாராத அனைத்துப் பணிகளையும் ஆக்கிரமித்துக் கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: