முதலாம் உலகப் போரில் மாயமான நீர்மூழ்கிக் கப்பலின் பாகங்கள் கண்டுபிடிப்பு!
Sunday, December 24th, 2017
அவுஸ்திரேலிய கடற்படைக்குரிய நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று முதலாம் உலகப்போரின் போது திடீரென மாயமாகிப் போனது. இந்த நிலையில் தற்பொழுது அதன் பாகங்கள்கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
103 ஆண்டுகளுக்குப் பின்பு குறித்த கப்பலின் உடைந்த பாகங்கள் பப்புவா நியூ கினியாவின் பார்க் தீவுகள் பகுதியில் உள்ள கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அவுஸ்திரேலிய கடற்படைக்கு சொந்தமான HMAS AE-1 என்ற நீர்மூழ்கிக் கப்பல் 1914 ஆம் ஆண்டு திடீரென காணாமல் போனது. இதனால் அதில் பயணித்தவர்கள்உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் நீண்ட காலமாக கப்பல் தேடப்பட்டுவந்தது.
இந்தத் தேடலில் நீருக்குள் மூழ்கித் தேடும் ‘டிரோன்’ தொழிநுட்ப கருவிகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் அதன் பாகங்களை நீர்மூழ்கி வீரர்கள்கண்டுபிடித்துள்ளனர். குறித்த கப்பலில் அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தின் கடற்படை வீரர்கள் 35 பேர் பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|
|


