முகத்தை தானமாகப் பெற்ற இளைஞர்!

Sunday, February 19th, 2017

அமெரிக்காவின் மின்னெ கோட்டா மாகாணத்திலுள்ள வுயோமிங் நகரைச் சேர்ந்தவர் ஆன்டி கான்ட்னெஸ் (31). கடந்த 2006 ஆம் ஆண்டு இவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றார்.

ஆனால், அவர் மரணமடையவில்லை. முகம் சிதைந்தது. மனம் வெறுத்த நிலையில் வாழ்ந்து வந்தார். பின்னர் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றார். ஏனைய உறுப்புகளைப் போன்றே முகத்தையும் தானமாகப் பெற்று சீரமைக்கலாம் என மருத்துவர் ஆலோசனை வழங்கினார்.

முகத்தைத் தானமாகத் தருபவருக்காக ஆன்டி கான்ட்னெஸ் காத்திருந்தார். இந்நிலையில், மின்னெ கோட்டாவைச் சேர்ந்த காலன் ரோஸ் என்பவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி லில்லியின் அனுமதி பெற்று அவரது முகம் தானமாகப் பெறப்பட்டது.

அதைத் தொடர்ந்து, காலன் ரோஸின் முகத்தில் இருந்து மூக்கு, தாடைகள், வாய், உதடுகள், நாடி, மற்றும் பற்களை அகற்றி அதனை ஆன்டி கான்ட்னெஸிற்கு மருத்துவர்கள் பொருத்தினர்.

இதனை முக சீரமைப்பு சிறப்பு நிபுணர் மருத்துவர் சமீர் மார்தானி நடத்தினார். சத்திரசிகிச்சை முடிந்து 3 வாரங்கள் கழித்து கண்ணாடியில் சான்ட்னெஸ் தனது முகத்தைப் பார்த்தார். அப்போது தனது முகம் முழுவதும் அழகாக மாறியிருப்பதைக் கண்டு அதிசயித்தார்.

முக மாற்று சத்திரசிகிச்சையை 56 மணி நேரம், 60 பேர் கொண்ட மருத்துவக்குழு நடத்தியது. மருத்துவர்களுக்கும் தனது கணவர் ரோசின் முகத்தைத் தனக்கு தானமாக அளித்த அவரது மனைவி லில்லிக்கும் நன்றி கூறியுள்ளார் சான்ட்னெஸ்.

ad_235372916-1024x683

ad_235372842-683x1024

Related posts: