மனித மூளைக்கு இணையான ரோபோ- ஆச்சரிய கண்டுபிடிப்பு!

Monday, November 28th, 2016

மனிதனின் மூளைக்கு இணையான நியூரோன் அடங்கிய மிகவும் முன்னேற்றமான இயந்திர மனிதனை(ரோபோ) விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற்ற எதிர்கால தொழிற்நுட்பம் சம்பந்தமான நிகழ்ச்சி ஒன்றில் இந்த இயந்திர மனிதன் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

அறிவு கூர்மை மற்றும் தொழிற்நுட்பவியலாளரான இந்த இயந்திர மனிதனை ரொபின் ஸ்லோஹான் என்ற விஞ்ஞானி உருவாக்கியுள்ளார். மேலும் சில விஞ்ஞானிகள் இயந்திர மனிதனின் திறனை மேம்படுத்தி வருகின்றனர்.

அல் என பெயரிட்டுள்ள இந்த இயந்திர மனிதன், 24 மணிநேரமும் எந்த தடையுமின்றி நூல்களை எழுதும் திறன்படைத்தது. இயந்திர மனிதன் அறிவியல் புதின கதை ஒன்றை எழுதி வருகிறார்.

இயந்திர மனிதனை உருவாக்கியுள்ள விஞ்ஞானிகள் முதல் முறையாக 1960 ஆம் மற்றும் 1970 ஆம் ஆண்டுகளில் இயந்திர மனிதனை உருவாக்கினார்கள். தற்போது அந்த இயந்திர மனிதனை மிகவும் முன்னேற்றமாக உருவாக்கியுள்ளனர்.

எதிர்காலத்தில் உலகில் நாவல்களை வெளியிடும் மனிதர்களை விட திறன் கொண்ட செயற்கையான அறிவை கொண்டு இயந்திர மனிதன் எனக் கூறப்படுகிறது.இயந்திர மனிதன் கதைகளை எழுத ஆரம்பித்துள்ளதால், மனிதனின் அறிவுக்கு இந்த இயந்திர மனிதன் கடும் சவாலாக அமையலாம்.

Untitled-1 copy

Related posts: