மனித குலத்தின் முதல் ஆதித்தாய் !

Thursday, September 1st, 2016

எதியோப்பியாவில் கடந்த 1974ஆம் ஆண்டு 3.2 மில்லியன் ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்கு லூசி என பெயரிட்டுள்ள ஆராய்ச்சியாளர்கள், மனிதர்களின் ஆதித்தாய் இவர் தான் என கூறுகின்றனர்.மூன்றரை அடி உயரமும் 29 கிலோ எடையும் கொண்ட லூசி, சிறிய பாதங்கள், நீளமான கைகளுடன், நவீன சிம்பன்ஸியை ஒத்திருக்கிறார்.

மனிதக் குரங்குகளுக்கு மத்தியில் எழுந்து நின்று, நடந்து சென்ற முதல் உயிரினக் கூட்டத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.மேலும் 40 அடி உயர மரத்திலிருந்து விழுந்து இறந்து போயிருக்கலாம் எனவும் தெரிவிக்கின்றனர்.

இதனால் மார்பெலும்புகள், இடுப்பு எலும்புகள், தொடை எலும்புகள், தோள்பட்டை எலும்புகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், ஆதி மனித இனத்தைச் சேர்ந்த இந்த லூசியை வைத்து இன்னும் ஏராளமான விஷயங்களை மனித குலம் அறிய வேண்டியுள்ளது எனவும் ஆராய்ச்சியாளர்களான கேப்பல்மன் மற்றும் ரிச்சர்ட் கெட்சம் தெரிவித்துள்ளனர்.

lucy

625.0.560.350.160.300.053.800.668.160.90 (2)

Related posts: