மனித உடலில் மின்சாரத்தை உருவாக்கும் பக்ரீரியாக்கள்?

Saturday, September 22nd, 2018

மனித உணவுக் கால்வாயில் வாழும் பக்ரீரியாக்கள் மின்சாரத்தை உற்பத்திசெய்யும் ஆற்றல் வாய்ந்தவை என ஆய்வொன்று உறுதிப்படுத்தியுள்ளது.

சுவீடனைச் சேர்ந்த ஆய்வாளர்களே இதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இவர்களது ஆய்வின்படி இலத்திரிக் அமில பக்ரீரியாக்கள், மற்றும் பல பக்ரீரியாக்கள் மின்னிரசாயவியலை செயற்படுத்தும் திறன் கொண்டவை எனத் தெரியவருகிறது.

இப் பக்ரீரியாக்களின் கலத்திற்கு வெளியேயான இலத்திரன் இடம்மாற்றச் (ணிஜ்tக்ஷீணீநீமீறீறீuறீணீக்ஷீ ணிறீமீநீtக்ஷீஷீஸீ ஜிக்ஷீணீஸீsஜீஷீக்ஷீt) செயற்பாடு காரணமாக (இலத்திரன்களை உள்ளே, வெளியே இடம்மாற்றும் செயற்பாடு) மின்சாரம் தோற்றுவிக்கப்படுகிறது.

இங்கு குயினோன் எனப்டும் மூலக்கூறுகளின் உதவியுடனேயே இவ் இலத்திரன் பரிமாற்றம் இடம்பெறுகிறது.

உணவுக் கால்வாயினுகள் பக்ரீரியாக்களால் மின்சாரம் உற்பத்திசெய்யப்படுவது அறியப்படுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: