மணப் பெண் ஒருவர் மூவாயிரத்து 200 மீற்றர் நீளமான சேலையினை அணிந்து உலக சாதனை!
Friday, September 22nd, 2017
மணப் பெண் ஒருவர் மூவாயிரத்து 200 மீற்றர் நீளமான ஒசரி சேலையினை அணிந்து உலக சாதனை படைத்துள்ளார்.
இச்சம்பவம் நேற்றைய தினம் கண்டியில் இடம்பெற்ற திருமண வைபவத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த சேலை கண்டி கெடம்பே சந்தியில் இருந்து ஈரியகம சந்தி வரையில் நீளமுடையது என கணிக்கப்பட்டுள்ளது.
பாரவூர்தி ஒன்றில் எடுத்து வரப்பட்ட ஒசரி சேலை வீதியில் சுமார் 250 மாணவர்களால் தாங்கி பிடிக்கப்பட்டது. கின்னஸ் சாதனையை கண்காணிக்கும் குழு முன்னிலையில் ஒசரி சேலையின் நீளம் அளவிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் போது மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவும் கலந்து கொண்டார். இதற்கு முன்னர் இந்திய பெண் ஒருவர் இரண்டாயிரத்து 800 மீற்றர் நீளமான சேலையினை அணிந்து சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
அதிக வசதியுடன் வருகின்றது ஸ்கைப்பின் புதிய பதிப்பு!
எழுத்தாளர் பால் பேட்டிக்கு மான் புக்கர் விருது!
கலக்ஸி நோட் 7 தாக்கம் - சாம்ஸங் இலாபத்தில் 30 சதம் வீழ்ச்சி!
|
|
|


