பொருட்களை தூக்கி செல்ல கைகளைக் கொண்ட ட்ரோன் விமானங்கள்!
Monday, September 12th, 2016
அண்மைக் காலத்தில் தொழில்நுட்ப உலகில் புரட்சியை ஏற்படுதுத்திய சாதனங்களுள் ட்ரோன் எனப்படும் சிறிய வகை விமானமும் ஒன்றாகும்.
தற்போது இந்த விமானத்தைப் பயன்படுத்தி பொருட்களை ஹோம் டெலிவரி செய்தல், கமெராக்களை பொருத்தி வீடியோ பதிவு செய்தல் போன்றவையும் இடம் பெற்று வருகின்றது. இந்நிலையில் 10 கிலோ கிராம்கள் வரையில் பாரம் கூடிய பொருட்களை தூக்கி செல்லக்கூடிய வகையில் நவீன ட்ரோன் விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த வசதியினை வழங்கக்கூடிய வகையில் இந்த விமானத்தில் விசேடமாக ரோபோ கைகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த விமானத்தினை ஜப்பானில் Prodrone நிறுவனம் வடிவமைத்துள்ளது.
மேலும் காலநிலை மாற்றங்களுக்கு முகம் கொடுக்கக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளதுடன், 60 km/h (37 mph) எனும் வேகத்திலும் பறக்கக்கூடியதாக இருக்கின்றது. இதில் 22.2v/16,000mAh வகை மின்கலங்கள் இரண்டு தரப்பட்டுள்ளன.
இதனால் தலா ஒரு மின்கலத்தின் உதவியுடன் 30 நிமிடங்கள் வரை தொடர்ச்சியாக பறப்பில் ஈடுபட முடியும்.இதில் காணப்படும் மற்றுமொரு விசேட அம்சமாக கட்டுப்படுத்தக்கூடிய உச்ச பட்ச எல்லை சுமார் 5,000 மீற்றர் வரை காணப்படுகின்றது.


Related posts:
|
|
|


