பேஸ்புக்கிற்கு போட்டியாக புதிய சமூக வலைத்தளம்!
Friday, March 18th, 2016
சமூக வலைத்தளமான பேஸ்புக்கிற்கு போட்டியாக புதிய சமூக வலைத்தளத்தை உருவாக்கும் முயற்சியில் சம்சுங் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
பேஸ்புக் சமூக வலைத்தளமானது அறிமுகம் செய்யப்பட்டு 12 வருடங்கள் கடந்துள்ளன. எனினும் இதுவரை எந்தவொரு சமூக வலைத்தளத்தினாலும் இதனை அசைக்க முடியவில்லை. இவ்வாறிருக்கையில் தற்போது Waffle எனப்படும் சமூக வலைத்தளத்தினையும் அதற்கான மென்பொருளை உருவாக்கி வருவதாக சம்சுங் நிறுவனம் அறிவித்துள்ளது.
புகைப்படங்கள் உட்பட பல வகையான உள்ளடக்கங்களை (Contents) பகிரக்கூடியதாவும், சட் செய்யக்கூடியதாகவும் இருக்கும் இவ் வலைத்தளத்திற்கான பீட்டா மென்பொருளானது விரைவில் அன்ரோயிட் சாதனங்களுக்காக அறிமுகம் செய்யப்படவுள்ளது என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
உலகின் முதலாவது சதுப்புநில அருங்காட்சியகம் இலங்கையில்!
அப்பிளின் புதிய அறிமுகங்கள்
வேகமாக உருகும் அண்டார்டிகாவின் பனிப்படலம்!
|
|
|


