பெருங்கடல்கள் சூடாவதால் உண்டாகும் பாதிப்புகள்: அச்சம் வெளிப்படுத்தியுள்ள புதிய ஆய்வு!

Tuesday, September 6th, 2016

பெருங்கடல்கள் சூடாவதால் உண்டாகும் உலகளாவிய தாக்கம் குறித்து மிகவும் குறைவாக மதிப்பீடு செய்யப்படுவதாக 12 நாடுகளை சேர்ந்த 80 விஞ்ஞானிகள் தொகுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருவநிலை மாற்றத்தால் மிதவைகள், ஜெல்லி மீன்கள், ஆமைகள் மற்றும் கடல் பறவைகள் ஆகியவை தங்களை காத்துக் கொள்ள கடல் நீரில் இறங்கி விடுவதாக, இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச அமைப்பு நிறுவியுள்ள ஆராய்ச்சி கூறியுள்ளது. முன்பு, பெருங்கடல் நீர் அவற்றுக்கு மிகவும் குளிராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மீன் இனங்கள் புதிய அட்சரேகைகளுக்கு இடம் பெயர்ந்து விட்டதால், உலகின் மீன்பிடித்துறை சீர்குலைந்து விடலாம் என்றும் அந்த ஆராய்ச்சி மேலும் தெரிவித்துள்ளது.

கடல் தொடர்பான வெப்ப மண்டல நோய்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் பாசிகளின் அதிகரிப்பு ஆகிய பிரச்சனைகள் பல புதிய பகுதிகளுக்கும் பரவக்கூடும் என்றும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

140330102727_global_warming_512x288_afp_nocredit

Related posts: