பூரான்களின் விஷம் தொடர்பில் புதிய தகவல்!

மனிதர்களை பூரான்கள் கடித்தால் வீக்கம் மற்றும் வேதனை உண்டாகும்.ஆனால் சிறிய அளவிலான உயிரினங்களில் மரணத்தை ஏற்படுத்தும்.
இதன் விஷமானது தனது எடையிலும் பார்க்க 15 மடங்கு எடை கூடிய உயிரினங்களைக் கூட கொன்றுவிடும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சுண்டெலிகளை வைத்து மேற்கொண்ட ஆய்விலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆய்வானது சீனாவில் உள்ள Kunming Institute of Zoology நிறுவனத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது பூரானை விடவும் 15 மடங்கு எடைகொண்ட சுண்டெலியானது வெறும் 30 செக்கன்களில் உயிரைவிட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Related posts:
பேஸ்புக்கிற்கு போட்டியாக புதிய சமூக வலைத்தளம்!
மீள்பயன்படுத்தப்படும் ஆளில்லா விண்கலன்களை இந்தியா ஏவியது!
வாட்ஸ் அப்பில் Animated GIFs அனுப்பும் வசதி இணைப்பு!
|
|