செவ்வாய் கிரகத்தில் வீடு: சோதனையை ஆரம்பித்தது நாசா!

Thursday, March 31st, 2016

செவ்வாய் கிரகத்தில் விஸ்தரிக்கத்தக்க வீடு ஒன்றை சோதனை முயற்சியாக உருவாக்க நாசா திட்டமிட்டு வருகிறது.

செவ்வாய் கிரகம் குறித்தும் அங்கு காணப்படும் பல்வேறு உருவங்கள் குறித்தும் சமீப காலமாக பல்வேறு தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளது. இதன் ஒரு பகுதியாக அமெரிக்க விண்வெளி நிர்வாகமான நாசா புது முயற்சி ஒன்றை சோதித்து பார்க்க திட்டமிட்டுள்ளது.

எதிர்காலத்தில் மிதவை வீடுகளே செவ்வாய் கிரகத்தில் சாத்தியம் என கருதும் நாசா, சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துடன் இணைக்கும் வகையில் விஸ்தரிக்கத்தக்க வீடு ஒன்றை சோதனை செய்ய உள்ளது.

வரும் ஏப்ரல் 8 ஆம் திகதி முதல் இந்த முயற்சிக்கான பணிகளை துவங்க உள்ள நாசா, சர்வதேச விண்வெளி ஆய்வகத்துடன் இணைக்கப்படும் முதல் சோதனை வீடு இதுவெனவும் தெரிவித்துள்ளது.

செவ்வாய் கிரகம் நோக்கியுள்ள பயணம் மிகவும் சிக்கலானது மற்றும் சவாலானது என தெரிவித்திருக்கும் நாசா, அதற்கான தீர்வை நோக்கி நகர்வதில் தொடர்ந்து முயன்று வருவதாகவும் தெரிவித்துள்ளது.

விஸ்தரிக்கத்தக்க வீடு அல்லது அறை குறித்த முயற்சியில் அறிவியல் ஆய்வாளர்கள் வெற்றிபெற்றால் அது சர்வதேச விண்வெளி ஆய்வகத்தில் பணிபுரியும் விண்வெளி வீரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்றனர்.

செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் அனுப்பப்படுவதற்கு முன்னர் அந்த வீரர்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் பல்வேறு கட்டங்களாக அனுப்பி வைக்கவும் நாசா முடிவு செய்துள்ளது.

nasa_plans_002

 

 

Related posts: