பூமியின் பழைய உயிர் ஆதாரம் கண்டுபிடிப்பு!

Saturday, March 4th, 2017

பூமியில் வாழ்ந்த மிக பழைய உயிரினங்களின் படிமங்களை கண்டுபிடித்ததாக விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கனடிய பாறைகளில் 4.28 பில்லியன் ஆண்டுகள் பண்டைய நார் வடிவப் பொருட்கள், குமிழ்கள் மற்றும் குழாய்கள் கொண்டதாக உள்ளதென ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த காலம் என்பது பூமியின் தோற்றத்திற்கு பின் நீண்ட காலம் எடுக்காத நிலையில் பூமியில் இருந்த மிக பண்டைய உயிரினங்களாக இவை நம்பப்படுகிறது. இதன்படி பூமியின் தோற்றத்திற்கு பின் 200 மில்லியன் தொடக்கம் 500 மில்லியன் ஆண்டுகளில் உயிர்கள் தோன்றியிருக்க வேண்டும் என்ற கணிப்புக்கு விஞ்ஞானிகள் வந்துள்ளனர்.

இந்த ஆய்வு முடிவுகள் நேச்சர் சஞ்சிகையில் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னர் 2013 ஆம் ஆண்டு மேற்கு அவுஸ்திரேலியாவில் சுமார் 3.4 பில்லியன் ஆண்டுகள் பழைமையாக நுண்தொல்லுயிர் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதே மிகப் பழைய உயிர் ஆதாரமாக கருதப்பட்டது.

எனினும் இந்த கண்டுபிடிப்புக் குறித்து அனைத்து விஞ்ஞானிகளும் ஒருமித்த நிலைப்பாட்டை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

coltkn-03-03-fr-01171308791_5282247_02032017_MSS_GRY

Related posts: