புற்றுநோய் மரணம் அதிகரிக்க 2008 ஆம் ஆண்டு நிதி நெருக்கடியே காரணமாம்!
Friday, May 27th, 2016
கடந்த 2008-ஆம் ஆண்டு ஏற்பட்ட உலகளாவிய நிதி நெருக்கடி பிரச்சினையால், மிகவும் வளர்ச்சியடைந்த 35 நாடுகளில், புற்றுநோய் தொடர்பான மரணங்கள் கூர்மையாக அதிகரித்திருப்பதாக புதிய ஆய்வு பரிந்துரைத்துள்ளது.
வேலை வாய்ப்பின்மை மற்றும் சுகாதார செலவுகள் குறைப்பு ஆகியவை அதிகரித்த காரணங்களால், 2008-க்கு அடுத்த இரண்டு ஆண்டுகளில் புற்றுநோய் தொடர்பாக கூடுதலாக 2, 60, 000 மரணங்கள் நிகழ்ந்ததாக இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.
நாட்டு மக்கள் அனைவருக்கும் சுகாதாரப் பாதுகாப்பு வழங்கும் பிரிட்டன் மற்றும் ஸ்பெயின் போன்ற நாடுகளில், புற்றுநோய் தொடர்பாக கூடுதல் மரணங்கள் ஏற்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும், உலகளவில் புற்றுநோயால் 8 மில்லியன் மக்கள் பலியாகின்றனர்.
புற்றுநோய் தாக்கத்தை பொருளாதார நடவடிக்கைகள் எவ்வாறு பாதிக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டிய முக்கியத்துவத்தை, லண்டன் இம்பீரியல் கல்லூரியை சேர்ந்த நாட்டின் முன்னணி விஞ்ஞானியான மகிபன் மருதப்பு விளக்கியுள்ளார். இக்கண்டுபிடிப்புகள் தி லென்செட் என்ற மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ளது.
Related posts:
|
|
|


