புதிய நட்சத்திர மண்டலங்கள் கண்டுபிடிப்பு!

Sunday, July 17th, 2016

உலகின் மிக சக்தி வாய்ந்த விண் நோக்கியாக ( டெலெஸ்கோப்) உருவெடுக்கவிருக்கும் டெலஸ்கோப் அனுப்பிய புதிய படங்கள் பிரபஞ்சத்தின் ஒரு சிறு மூலையில் 1,300 புதிய நட்சத்திர மண்டலங்கள் இருப்பதாகக் காட்டுகின்றன.

பிரபஞ்சத்தின் இந்தப் பகுதியில் இதற்கு முன்பு வரை 70 நட்சத்திர மண்டலங்கள்தான் இருப்பதாகத் தெரியப்பட்டுவந்தது.

தென்னாப்ரிக்காவின் கேப் டவுனிலிருந்து 600 கிமீ தொலைவில் இருக்கும் மீர்கேட் விண் நோக்கி இப்போது இருப்பதை விட நான்கு மடங்கு அதிக சக்தி வாய்ந்ததாகக் கருதப்படும்.

இந்த விண் நோக்கி அனுப்பிய படங்கள் எதிர்பார்த்ததை விட மேலும் நன்றாக இருப்பதாக இத்திட்டத்தில் தொடர்புடைய விஞ்ஞானி ஒருவர் கூறினார்.

இந்த டெலெஸ்கோப் ஏற்கனவே பூமியின் தென் அரைக் கோளப்பகுதியில் மிகச்சிறந்த டெலெஸ்கோப்பாக விளங்குவதாக அந்த விஞ்ஞானி, ஃபெர்னாண்டோ கேமில்லோ கூறினார்.

Related posts: