புதிய குவாண்டம் துணிக்கையை கண்டுபிடித்தனர் பௌதீகவியலாளர்கள்!

Monday, April 24th, 2017

குவாண்டம் என்பது பௌதீகவியல் ரீதியாக மிகவும் சிறிய துணிக்கையை குறிப்பிடும் சொல் ஆகும். இவ்வாறு திரவப் பளிக்கு நிலையில் காணப்படும் உலகின் முதலாவது முப்பரிமாண குவாண்டம் துணிக்கை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதனை Caltech நிறுவனத்தின் பௌதீகவியலாளர்கள் மற்றும் Institute for Quantum Information and Matter என்பன இணைந்து கண்டுபிடித்துள்ளனர்.

எதிர்காலத்தில் அல்ட்ரா வேகத்தில் செயற்படக்கூடிய குவாண்டம் கணினிகளை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.புதிய குவாண்டம் துணிக்கையின் கண்டுபிடிப்பானது குறித்த கணினியை உருவாக்குவதற்கு பெரிதும் உதவியாக இருக்கும் என நம்பப்படுகின்றது.இதேவேளை திரவப் பளிங்கானது செயற்கையாக உருவாக்கக்கூடியதாக இருப்பதுடன், இதனை இலத்திரனியல் சாதனங்களின் திரையில் பயன்படுத்த முடியும்.

இது முதன் முறையாக 1999ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டது முப்பரிமாணத்திலுள்ள திரவப் பளிங்கு என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: