புதிய கிரகங்களாக உருவாகும் நட்சத்திரங்களின் உடைந்த நீள்வட்ட வளையங்கள்!
Thursday, October 26th, 2017
ஹவாய் தீவில் சக்திவாய்ந்த அதிநவீன டெலஸ்கோப்களை அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் நிறுவியுள்ளது. இதன் மூலம் விண்வெளியில் உலாவரும் புதிய கிரகங்கள், கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் மற்றும் வால் நட்சத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், வால் நட்சத்திரங்களின் உடைந்த நீள்வட்ட வளையங்கள் ஒன்றிணைந்து புதிய கிரகங்களாக உருவாகியுள்ளதை சமீபத்தில் நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இவை பூமியைப் போன்று பல மடங்கு அளவு கொண்டவை என விண்வெளி ஆய்வு விஞ்ஞானி ஜான்ஸ் ஹொப்கின்ஸ் தெரிவித்துள்ளார்.
நீள்வட்ட வளையங்கள் அதிக அளவிலான கார்பன் உள்ளிட்ட பல்வேறு மூலக்கூறுகளால் ஆனது என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த புதிய கிரகங்கள் சூரிய மண்டலத்தில் இருந்து 3 மடங்கு தொலைவில் இருப்பது நாசா நிறுவிய டெலஸ்கோப்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Related posts:
உலகின் மிக பெரிய இந்து ஆலயம் அமெரிக்காவில்!
300 ஆண்டுகளுக்கு பின் சிறுமியின் சடலம் திடீரென கண் விழித்தது!
பூமிக்கு ஆபத்து - விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
|
|
|


