பிறந்த தினத்தன்றே உயிர் பிரிந்த இயற்பியலாளர் ஸ்டீபனின் முதல் பேஸ்புக் பதிவு !

Thursday, March 15th, 2018

உலகப் புகழ்பெற்ற அறிவியலாளர், இயற்பியலாளர் என பன்முக திறமை கொண்டவரான ஸ்டீபன் ஹாக்கிங் தனது 76-வது வயதில் மரணமடைந்தார்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு நிகரான புத்திகூர்மை உடையவர் என போற்றப்பட்ட ஸ்டீபன், ஐன்ஸ்டீன் பிறந்தநாளான 14.03.2018 அன்று தன் உயிரை இழந்துள்ளது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபஞ்சம் உருவாகியது முதல் மனிதனின் இறப்புக்கு பின்னர் சொர்க்கமும் கிடையாது, நரகமும் கிடையாது என அறிவியல் ரீதியான பல கோட்பாடுகளை இவர் வகுத்துள்ளார்.

இப்படிப்பட்ட புகழ்மிக்க இந்த அறிஞர், கடந்த 2014-ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் திகதியன்று நவீன உலகின் நாயகனான பேஸ்புக்கில் தனது அதிகாரப்பூர்வ கணக்கை தொடங்கினார்.

அந்த கணக்கில் தாம் இணைந்ததை வெளிப்படுத்தும் வகையில் ஸ்டீபன் ஹாக்கிங் இட்ட முதல் பதிவு:

images

“இந்த பிரபஞ்சம் எப்படி உருவானது என்பது எனக்கு எப்போதுமே ஆச்சரியமான விடயமாக இருந்திருக்கிறது. விண்வெளி உள்ளிட்ட எல்லாமே இப்போது பெரும் ஆச்சரியமான விடயங்கள் இல்லைதான். எனினும் எனது வேட்கை தணியவில்லை.

இன்று நாம் ஒருவருடன் ஒருவர் தொடர்பில் இருப்பதற்கான முடிவற்ற சாத்தியம் வந்துவிட்டது. அதில் இணைய இப்போது எனக்கும் ஒரு வாய்ப்பு. எனது பயணத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஆர்வமாக உள்ளேன். காத்திருங்கள், நானும் உடன் இருப்பேன், நன்றியுடன் ஸ்டீபன் ஹாக்கிங்.”

தனது 21-வது வயதில் நரம்பியல் நோய் தாக்கியதில் சர்க்கர நாற்காலியில் அம்ர்ந்த இந்த அறிவியல் மேதை, வாழ்க்கையில் சாதித்த சாதனைகள் எண்ணில் அடங்காதவை.

Related posts: