பிரித்தானிய ஓவியரின் படைப்புகளை திருடியதாக சந்தேகிக்கப்படும் ஏழு பேர் கைது!
Monday, May 30th, 2016
பிரித்தானிய ஓவியக் கலைஞர் பிரான்சிஸ் பேக்கனின் ஓவியங்களை திருடியதில் ஈடுபட்டதாக ஏழு சந்தேக நபர்களை ஸ்பெயின் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த ஓவியங்கள் இருபத்தி ஏழு மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேலாக மதிப்புடையவை என தெரிகிறது.
இறந்துபோன பேக்கனின் நண்பர் உரிமையாக வைத்திருந்த இந்த ஓவியப் படைப்புகள் கடந்த ஜூலை மாதம் மாட்ரிட்டில் வைத்து திருடப்பட்டன. அவற்றில் ஐந்து ஓவியங்கள் மீட்கப்படவில்லை.
திருடப்பட்ட இந்த ஓவியங்களின் மூல விபரங்களை கேட்டு மின்னஞ்சலை பெற்ற பிரித்தானிய நிறுவனம் தங்களை தொடர்பு கொண்டபோது, ஓவியங்களை மீட்கும் புலனாய்வில் திருப்புமுனை ஏற்பட்டது என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Related posts:
நெய்மாருக்கு சவால் விடும் மார்க் சக்கர்பெர்க்!
யாகூ பயனாளிகளின் கணக்குகள் திருட்டு!
நடுவானில் வெடித்து சிதறிய ‘ஃபயர் ஃபிளை’ விண்ணுக்கு ஏவிய முதல் ரொக்கெட்!
|
|
|


