பிரபல தேடல் தளம் விடைபெற்றது!
Wednesday, August 10th, 2016
உலக அளவில் அதிகமாக பயன்படுத்தப்பட்ட டொரன்ட்ஸ் தேடல் தளமான டொரன்ட்ஸ்.இயூ(Torrentz.eu) தனது சேவையை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளது.
கிக்ஏஸ் டொரன்ட்ஸ் தளம் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து மற்றொரு பிரபல டொரன்ட்ஸ் தேடல் இணையதளமான டொரன்ட்ஸ்.இயூ (Torrentz.eu) இணையதளம் தனது சேவையை முடித்துக்கொள்வதாக அறிவித்துள்ளது. கடந்த 13 ஆண்டுகளாக செயல்பட்ட டொரன்ட்ஸ்.இயூ தனது சேவை திடீரென நிறுத்திக்கொண்டதால் அத்தளத்தின் பயனாளர்கள் பலர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
டொரன்ட்ஸ்.இயூ தளத்தை ஒவ்வொரு நாளும் 10 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பயன்படுத்திவந்தார்கள். தற்போது இந்த தளத்தில் செல்ல முயல்பவர்களுக்கு “டொரன்ட்ஸ் எப்போதும் உங்களை நேசிக்கும்…சென்று வருகிறேன்” என்ற செய்தி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
Related posts:
வேற்று உலகத்தை படம் பிடிக்க யோசனை!
வடதுருவத்திற்கு ஆய்வுக்கலன்: பருவநிலை மாற்றங்களை கணிக்க திட்டம்!
இலங்கை ஆழ்கடலில் அதிசய கப்பல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது!
|
|
|


