பாவனைக்கு வருகின்றது பறக்கும் கார்!

Tuesday, June 28th, 2016

உலகின் முதலாவது தயாரிக்கப்பட்ட பறக்கும் கார் மொடலாக கருதப்படும் டெர்ராஃப்யூஜியா நிறுவனத்தின் டிரான்சிஷன் பறக்கும் காருக்கு அமெரிக்க வான்போக்குவரத்து ஆணையம் சட்டப்பூர்வமான அங்கீகாரம் அளித்துள்ளது.

டெர்ராஃப்யூஜியா நிறுவனத்தின் கோரிக்கையை ஏற்று, விதிமுறைகளில் சிறப்பு தளர்வுகளுடன் இந்த காருக்கு அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. இதையடுத்து, போக்குவரத்து துறை புதிய அத்தியாயத்தில் நுழைய இருக்கிறது.

லைட் ஸ்போர்ட்ஸ் ஏர்கிராஃப்ட்[LSA] என்ற வகையில், இந்த பறக்கும் காருக்கு சிறப்பு தளர்வுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

car-1

எல்எஸ்ஏ வகை குட்டி விமானங்களின் எடை 598.7 கிலோவுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆனால், காருக்குண்டான பாதுகாப்பு அம்சங்களை சேர்த்திருப்பதால், எடை கூடியிருக்கிறது. இதனை கருத்தில்கொண்டு விதியில் தளர்வு கொடுத்து அனுமதிக்க டெர்ராஃபியூஜியா கோரிக்கை வைத்தது. இந்த கோரிக்கை உள்பட பல விதிமுறை தளர்வுகளுடன் இதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.

கடந்த 2006ம் ஆண்டு முதல் டெர்ராஃப்யூஜியா டிரான்சிஷன் பறக்கும் கார் தயாரிக்கப்பட்டு, 2009ல் முதல்முறையாக பறக்கவிட்டு சோதனை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, 2012ம் ஆண்டு மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் இரண்டாவது டிரான்சிஷன் கார் உருவாக்கப்பட்ட சோதனை செய்யப்பட்டது. தற்போது மூன்றாவது டிரான்ஸ்சிஷன் கார் உருவாக்கப்பட்டு வருகிறது. விரைவில் இந்த கார் சோதனை செய்யப்பட உள்ளது

இந்த பறக்கும் கார் சாலையில் செல்வதற்கான பாதுகாப்பு விதிமுறைகளின்படி கட்டமைக்கப்பட்டிருக்கிறது. கார் கவிழ்ந்தால், பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் காக்கும் ரோல்கேஜ், மோதல்களை உள்வாங்கி பயணிகளை காக்கும் க்ரம்பிள் ஸோன் பகுதிகளுடன் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

car-4

பைலட் உள்பட இரண்டு பேர் பயணிக்கும் வசதி கொண்டது. சாலையில் செல்லும்போது இதன் இறக்கைகள் மடங்கிக்கொள்ளும். ஓடுபாதைக்கு சென்று, பறப்பதற்கான பட்டனை அழுத்தினால், சில வினாடிகளில் இறக்கைகள் விரிந்து பறப்பதற்கு தயாராகிவிடும்.

தரையில் டிரான்சிஷன் கார் மணிக்கு 110 கிமீ வேகம் வரையிலும், ஆகாயத்தில் மணிக்கு 177 கிமீ வேகத்திலும் பறக்கும். இந்த காரில் 87 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது.

முழுமையாக எரிபொருள் நிரப்பும்போது, தொடர்ச்சியாக 4 மணி நேரம் வரை பறக்கலாம். அதாவது, ஒருமணி நேரம் பறப்பதற்கு 19 லீட்டர் பெட்ரோல் செலவாகும். அதேபோன்று, தரையில் செல்லும்போது லீட்டருக்கு 15 கிமீ மைலேஜ் தருமாம். இந்த காரை இயக்குவதற்கு வாடிக்கையாளர்கள் சிறப்பு பயிற்சி பெறுவது அவசியம். 20 மணி நேரம் ஓட்டி பயிற்சி பெறுவதுடன், தேர்வில் வெற்றி பெற்றால்தான் டெலிவிரி கொடுக்கப்படும்.

இந்த புதிய பறக்கும் காருக்கு ஏற்கனவே 100 பேர் வரை முன்பதிவு செய்து காத்திருக்கின்றனராம். ஒரு காரின் விலை இலங்கை மதிப்பில் ரூ.3.12 கோடியாக தெரிவிக்கப்படுகிறது.

car-2

வரும் 2018ம் ஆண்டு இந்த பறக்கும் கார் வணிக ரீதியில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த காரை தொடர்ந்து அடுத்து பெட்ரோல் மற்றும் பேட்டரியில் இயங்கும் டிஎஃப் எக்ஸ் என்ற புதிய ஹைபிரிட் எலக்ட்ரிக் காரை டெராஃபியூஜியா வடிவமைத்து வருகிறது.

Related posts: