நோபல் பரிசுகளை அள்ளிய சிறுநாடு!

Saturday, July 23rd, 2016
ஒரு குட்டி நாடு, மொத்தமே ஒன்றரை கோடி தான் மக்கள் தொகை. ஆனால் அவர்கள் தான் இலைமறைகாயாக உலகையே ஆள்கிறார்கள் எப்படி ?

இஸ்ரேல் -பாலஸ்தீனத்திற்கு இடையே, ஜெருசலேம் உட்பட ஒரு தீராத நில உரிமைப் பிரச்சினை, அவ்வப்பொழுது போர், அதன் காரணமாக, யூதர்களுக்கும் பாலஸ்தீன அரபுகளுக்கும் நெடுங்கால பகை, அந்த அதிர்வால் உலக அளவிலான கிறிஸ்து- இஸ்லாம் மதப் பிரச்சினையில் அமைதி இல்லாத ஒரு ஊற்றுக்கண் சுமக்கப்படுகிறது. இது ஆழமாக பார்த்தால் அனைவருக்கும் புரியும்.

கிறிஸ்தவ மத கர்த்தாவான ஏசுவும் யூத இனத்தை சேர்ந்தவர் என்பதால், யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் மத வேறுபாட்டைத் தாண்டிய ஒரு நெருக்கம் இருக்கிறது.அது ஹிட்லர் என்ற சுனாமியில் சிக்கி, யூதர்கள் சந்தித்த பேரழிவுக்குப் பிறகு ஏற்பட்ட இரக்கமாகவோ இணக்கமாகவோ கூட கருதலாம்.

யூதர்களுக்கு அமெரிக்காதான் அவர்களுடைய பூர்வீக தேசத்தை புதிய மெருகோடு மீட்டுக்கொடுத்தது.இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் ஒரு பிணைப்பு இருப்பதால்தான் அரபுகள் கூட்டமைப்பை இஸ்ரேல் யூதர்களால் ஒரு சிறு தனிநாடாக சமாளிக்க முடிகிறது என்று நாம் நினைக்கிறோம்.

அதில் உண்மையும் இருக்கலாம். ஆனாலும், யூதர்கள் சாமானியர்கள் அல்ல என்பது, அவர்கள் 84 நோபல் பரிசுகள் வாங்கிய சாதனைகளில் இருந்தே நமக்கு புரிகிறது.பாலஸ்தீன வீரர்களும் கூட, அமெரிக்க உட்பட்ட ஏனைய நாட்டு வீரர்களை சமாளிப்பதைவிட, யூதர்களை யுத்தத்தில் சமாளிப்பது கடினம் என்று மனம் திறந்து கூறியுள்ளனர்.காரணம் வளர்ப்பா? மரபா?

யூத இனத்தில் கல்யாணம் பண்ணனும்னா ஏதாவது ஒரு துறையில் டாக்டர் பட்டம் வாங்கி இருக்க வேண்டுமாம்.கல்லூரியில் சேர முதலில் 5000 டாலர் கொடுத்து, ஏதாவது ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து, 15 பேருக்கு வேலை கொடுத்த பின்பு, அதை 15000 டாலர் ஆக்கினால் தான் கல்லூரியில் சீட் கிடைக்குமாம்.இதனால் இன்று உலகத்தில் உள்ள பாதி முக்கிய ப்ரெண்டெட் நிறுவனங்கள் அந்த நாட்டை சேர்ந்தவை தான்உலகத்தில் உள்ள அனைத்து சிறுவர் கார்ட்டூன் படங்களை தயாரிப்பது அவர்கள் தான்.

ஆனால், அந்த நாட்டின் குழந்தைகள் அதை பார்ப்பதில்லை. அங்கு அது தடை செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது வங்கிகளில் கடன் கொடுக்கும் கடன் வாங்கும் விதத்தை உலகத்துக்கு முதன் முதாலாக கற்றுக் கொடுத்தது இவர்கள் தான் கர்ப்பிணிப் பெண்கள் தொலைக்காட்சி , சினிமா பார்க்க அனுமதிக்கப் படுவதில்லை , அதற்கு பதில் கர்ப்பிணிகள் கணக்கு மற்றும் ஆங்கிலம் போன்ற பல மொழிகளில் பாடம் படிப்பார்களாம் , அப்படிச் செய்வதால் பிறக்கும் குழந்தைகள் அறிவாக பிறக்கிறார்களாம்.

உலகத்தில் மெத்த படித்த மேதாவிகளும் உலகத்தை மறைமுகமாக ஆளும் தந்திரம் மிக்கவர்களும் அதிகம் உள்ள ஒரே நாடு இஸ்ரேல்தான் இவர்களை யாரும் ஒன்றும் செய்ய முடியவில்லை இப்படி இன்னும் ஏராளாமான விஷயங்கள் அவர்களின் தனித்துவத்தை காட்டுகிறது. அவர்கள் எல்லோரையும் ஆள காரணம் மரபைவிட வளர்ப்புதான் என்று இப்பொழுது தெரிகிறதா?

Related posts: