நேர்முகத்தேர்வு செய்யும் ரோபோ !

துபாயில் பொலிஸ் பணிக்கு விண்ணப்பித்தவர்களிடம் ரோபோ ஒன்று நேர்முகத் தேர்வு நடத்தியுள்ளது. சர்வதேச அளவில் நவீன கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்துவதில் முன்னிலை வகிக்கும் நாடுகளில் துபாயும் ஒன்று.
இந்த நிலையில், நேர்முகத்தேர்வில் கேள்விகளைக் கேட்கும் ரோபோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பொலிஸ் பணிக்கு விண்ணப்பித்தவர்களுக்கான நேர்முகத் தேர்வு துபாய் உலக வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இதில் முதற்கட்ட நேர்முகத் தேர்வை பொலிஸார் சார்பில் ரோபோ மேற்கொண்டது. சயில் அல் பர்ஹான் என இந்த பொலிஸ் ஸ்மார்ட் ரோபோவிற்கு பெயரிடப்பட்டுள்ளது.
2030 ஆம் ஆண்டிற்குள் துபாய் பொலிஸ் துறையில் 25 சதவீதம் ரோபோக்களைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Related posts:
அண்டவெளியின் கருந்துளை பிரபஞ்சத்தின் மிகப்பெரிய அற்புதம்.
விற்பனையாகி முடிந்த Nokia X6 கைப்பேசி!
அண்டவெளியில் சஞ்சரித்துக் கொண்டிருந்த விண் கலத்தை மீள பூமிக்கு கொண்டு வர நடவடிக்கை!
|
|