நூதன கலைவிழா-  ஆர்வமுடன் பங்கேற்ற பொதுமக்கள்!

Sunday, July 10th, 2016

பிரித்தானியாவில் நடைபெற்ற நூதன நிர்வாண கலை விழாவில் உடலெங்கும் நீல வண்ணத்தை பூசிக்கொண்டு பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

ஹல் நகரில் நடைபெற்ற இந்த நிர்வாண கலை வடிவமைப்பிற்கு சுமார் 3,200 பேர் ஆர்வமுடன் கலந்துகொண்டனர். பிரித்தானியாவில் இதுவரை நடைபெற்ற கலை நிகழ்வுகளில் இது மாபெரும் நிகழ்வு என கருதப்படுகிறது.

கலை நிகழ்வில் பங்கேற்ற அனைத்து மொடல்களும் அவர்கள் அணிந்து வந்த ஆடைகளை துறந்து நிர்வாணமாக உடலெங்கும் நீல வண்ணத்தை பூசிக்கொண்டு நகரின் முக்கிய பகுதிகளில் சாலையில் படுத்தும், பாலத்தில் குவிந்தும், நகர பூங்காவில் ஒன்று கூடியும் இந்த கலை வடிவத்தில் பங்கேற்றனர்.

அமெரிக்காவின் பிரபல கலைஞர் ஸ்பென்சர் டூனிக் இந்த சிறப்பு நிர்வாண கலை வடிவத்தை ஒருங்கிணைத்துள்ளார். உலகெங்கிலும் உள்ள 20 நாடுகளில் இருந்து கலை ஆர்வம் கொண்ட மொடல்கள் இந்த சிறப்பு நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்த கலை நிகழ்வு குறித்து பேசிய கலைஞர் டூனிக், இதுவரை தமது மேற்பார்வையில் நடைபெற்ற கலை நிகழ்வுகளில் இதுவே சிறப்பானதாக கருவதாக தெரிவித்தார்.

நிகழ்வுக்காக தெரிவு செய்யப்பட்ட பகுதிகள் வரலாற்று சிறப்பு மிக்கவை என்பதால் கலை நிகழ்வின் தரமும் அதற்கேற்றவாறு உச்சம் கண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பல வகையான உடல் அமைப்பு கொண்ட மக்கள் ஒன்று கூடி ஒரே வண்ணம் பூசிக்கொண்டு புகைப்படங்களுக்கு முகம் காட்டுவது என்பதை கண்டு களிப்பதே ஆனந்த வகை என கூறும் அவர், அடுத்த ஆண்டும் ஹல் நகரில் இதுபோன்ற ஒரு வேறுபட்ட சிந்தனையுடன் ஒரு கலை வடிவை பொதுமக்களுக்கு அளிக்க இருப்பதாகவும் உறுதி அளித்துள்ளார்.

 625.0.560.320.500.400.194.800.668.160.90 (6)

625.0.560.320.500.400.194.800.668.160.90 (8)

Related posts: