நீங்கள் Apple iTunes கணக்கு வைத்திருப்பவரா?
Sunday, December 11th, 2016
ஆப்பிள் நிறுவனத்தின் பல்வேறு சேவைகளுள் iTunes சேவையும் ஒன்றாகும். இச் சேவையில் பல்வேறு மொழிகளிலான பாடல்களை ஒன்லைனில் கேட்டு மகிழ முடியும்.
இப்படியிருக்கையில் iTunes பயனர்களுக்கு மற்றுமொரு சேவையை வழங்குவதற்கு ஆப்பிள் நிறுவனம் முன்வந்துள்ளது.இதன்படி இனி வீட்டிலிருந்தே புதிய திரைப்படங்களை iTunes ஊடாக பார்த்து மகிழ முடியும்.
புதிய திரைப்படங்கள் வெளியாகி இரு வாரங்களின் பின்னர் அத்திரைப்படங்களை iTunes இல் தரவேற்றம் செய்ய ஆப்பிள் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதற்காக திரைப்படங்களை வெளியிடும் ஸ்டூடியோக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுவருகின்றது. தற்போது திரைப்படங்கள் வெளியாகி 90 நாட்களின் பின்னரே DVD களில் வெளியிடப்படுகின்றது.
எனவே ஆப்பிளின் இந்த புதிய முயற்சியினால் நீண்ட காலம் காத்திருக்கத்தேவையில்லை. மேலும் இச் சேவையினைப் பெறுவதற்கான சந்தாவாக 25 டொலர்கள் தொடக்கம் 50 டொலர்களுக்கு இடைப்பட்ட பெறுமதி ஒன்று அறவிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related posts:
|
|
|


